தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்க மகிந்­த­வு­டன் இணைந்து செயற்­ப­டு­வேன் – மைத்­தி­ரி­பால சிறி­சேன

வடக்கு மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க புதிய தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்­ச­வும் நானும் முழு­மை­யான அர்ப்­ ­பணிப்­பு­டன் செயற்­ப­டு­வோம் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.

மைத்­திரி – மகிந்த அணி இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த மக்­கள் பலம் போராட்­டம் கொழும்பு நாடா­ளு­மன்ற சுற்­று­வட்­டத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

கடந்த வாரம் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அமைப்­பா­ளர்­க­ளு­டன் பேசிய மைத்­தி­ரி­பால, தான் உயி­ரு­டன் இருக்­கும் வரை­யில் வடக்கு கிழக்கு இணைப்போ, கூட்­டாட்­சியோ வழங்க மாட்டேன் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே நேற்­றைய தினம் மேற்­கண்­ட­வாறு உரை­யாற்­றி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எமது நாட்டு அடித்­தட்டு மக்­க­ளின் இன்ப துன்­பங்­க­ளை­யும், கலா­சா­ரத்தை அறி­யாது பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் நிகழ்ச்சி நிர­லின் கீழ் ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்­பட்­டி­ருந்­தார். அவ­ரு­டன் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது என்­ப­தால் கரு­ஜ­ய­சூ­ரிய அல்­லது சஜித் பிரே­ம­தா­சவை தலைமை அமைச்­ச­ராக நிய­மிப்­ப­தற்கு அவர்­க­ளு­டன் பேச்­சு­கள் நடத்­தி­னேன். ஆனால், தவை­ரு­டன் மோத முடி­யாது என்று கைவி­ரித்­தால்­தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கவிழ்க்க மகிந்த ராஜ­பக்­சவை தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­தேன்.

நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நானும் மகிந்த ராஜ­பக்­ச­வும் ஒரே மேடை­யில் மீண்­டும் இணைந்­துள்­ளோம். அதற்­காக சந்­தோ­ச­ம­டை­கின்­றேன். நவம்­பர் மாதம் என்­பது எமது நாட்­டில் முக்­கி­ய­மான மாத­மா­கும். 2014ஆம் ஆண்ட நவம்­பர் மாதம்­தான் சுதந்­தி­ரக் கட்­சியை விட்டு வெளி­யேறி பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­னேன்.

நான் தலைமை அமைச்­சர் கதி­ரை­யி­லி­ருந்து இரண்டு உரு­வங்­க­ளையோ அல்­லது இரண்டு மனி­தர்­க­ளையோ மாற்­ற­வில்லை. பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் நிகழ்ச்சி நிர­லின் கீழ் செயற்­பட்ட தோற்­றத்­தையே மாற்­றி­ய­மைத்­துள்­ளேன். எமது நாட்­டுக்­கும் தேசிய கலா­சா­ரத்­துக்­கும், வெளி­நாட்டு நிகழ்ச்சி நிரலை நிரா­க­ரிப்­ப­வ­ரை­யுமே தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­துள்­ளேன்.

கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளாக முடி­வு­களை எடுத்­தது அமைச்­ச­ரவை அல்ல. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­தான்.

நான் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கும் தீர்­மா­னத்தை சட்­ட­நி­பு­ணர்­க­ளு­டன் கலந்து பேசியே முடி­வெ­டுத்­தேன்.

இந்­தி­யா­வு­ட­னான எனது உற­வைச் சீர்­கு­லைக்க ரணில் விக்­கி­ர­ம­சிங்க சதி செய்­கின்­றார். அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பேசப்­பட்­ட­தாக ஒரு தவ­றான தக­வலை அவர்­களே வெளி­யில் கசி­ய­விட்­ட­னர். மக்­கள் பலத்­து­டன் விளை­யா­ட­வேண்­டாம் என்று நான் அவ­ருக்­குச் சொல்­கின்­றேன்.

வடக்கு மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க நானும், புதிய தலைமை அமைச்­சர் மகிந்த ராஜ­பக்­ச­வும் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­ப­டு­வோம். மூன்று தசாப்­த­கால போரில் பாதிக்­கப்­பட்ட வட­கி­ழக்­கில் 50ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தில் கடந்த மூன்­றறை வரு­ட­கா­ல­மாக nபிய முரண்­பா­டு­கள் காணப்­பட்­டன. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளின் இழு­ப­றி­யி­னால் இது­வரை ஒரு வீடு கூட அங்கு கட்­டப்­ப­ட­வில்லை – என்­றார்.

Recommended For You

About the Author: Editor