இணைந்த வடகிழக்கில் சமஷ்டித் தீர்வு நான் உயிருடன் இருக்கும்வரை இல்லை – மைத்திரி ஆவேசம்

“நான் இந்தக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கை இணைக்கவிடமாட்டேன். சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன். இவற்றைச் செய்யவேண்டுமாயின் என்னைக் கொல்லவேண்டும்” இவ்வாறு கடும்தொனியில் தெரிவித்தார் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தத் தகவலை லங்கா தீப இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்த போது, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் முன்வரிசையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor