3 சூறாவளிகள் இலங்கைக்கு அருகே உருவாகின – வடக்கில் மழை நீடிக்கும்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று சூறாவளிகள் இலங்கையைத் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

இலங்கைக்குக்கு தென்கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் உருவாகியுள்ள இந்த சூறாவளிகள் வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையைத் தாக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில்100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீச்சியும் ஏனைய சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor