தூங்கும் அறையில் கைபேசி பாவிப்பதை தவிர்க்கவும் – சுகாதார அமைச்சு

தூங்கும் அறையில் கைபேசி பாவிப்பது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் அறையில் கைத்தொலைபேசியை வைத்திருப்பது கடும் சுகாதார பாதிப்புக்கு காரணாமாகும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

“கைபேசி மற்றும் கணினி தொடர்பான உபகரணங்களில் அதிகம் நேரம் செலவிடுவது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

தூங்கும் அறையில் கைபேசி வைத்திருப்பது மூளை மற்றும் நரம்பு தொகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படும். இரவு தூங்க செல்லும் முன் அவ்வாறான உபகரணங்களை அறையிலிருந்து வெளியகற்றி அல்லது செயல்பாட்டினை துண்டித்து (OFF) வைக்குமாறு பொது மக்கள் வேண்டபடுகின்றார்கள்” என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor