யாழ்ப்பாணத்தில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இராணும் தயார் நிலையில்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும், பிரச்சினையான நிலமைகளை கட்டுபடுத்த, எந்த சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க இராணுவம் தயாராக இருப்பதாக தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

கதிர்காமத்தில் இடம்பெற்ற சமய வழிப்பாடுகளில் கலந்துக் கொண்ட தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு, தாங்கள் தயாராக இருப்பதாக இராணுவத்தின் யாழ்ப்பாணக் கட்டளை தளபதி அண்மையில் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

2 தினங்களுக்குள் வடக்கில் இயங்கும் ஆயுத குழுக்களை கட்டுப்படுத்த தங்களால் முடியும் எனவும் இது தொடர்பில் அரச உயர் மட்ட தரப்புக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அரசில் இருந்து அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் விரைந்து செயற்பட தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

அதனையடுத்து கடந்த வாரம் கண்டி தலாதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, யாழ்ப்பாணத்தில் வன்முறைக் குழுக்களைக் கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அனுமதி தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இராணுவத் தளபதியின் இந்தக் கருத்தை சட்டம், ஒழுங்கு அமைச்சர் நிராகரித்திருந்தார்.

இந்தநிலையில், அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்த வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, வடக்கில் இராணுவத்தை பயன்படுத்தும் அளவிற்கு பெரியளவிலான வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்ற பாங்கில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஆயுதக் குழுக்களால் சிறு சிறு வன்முறைகளே நடத்தப்படுவதாகவும், அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் உரிய செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆயுத குழுக்கள் வலுவிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் வடக்கில் சிவில் பாதுகாப்பை உறுதிபடுத்த 6 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை உரிய முறையில் பயன்படுத்தி வடக்கில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு தாம் உதவிகளை மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor