வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியீனால் நோயாளர்களுக்கு பார்வைக்குறைபாடு?

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 23 நோயாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் 17 நோயாளர்கள் பார்வைக் குறைபாடுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், டாக்டர் அனில் ஜயசிங்க ஆலோசனைக்கின் கீழ் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப்பிரச்சினை நுவரெலியா வைத்தியசாலையில் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தடுப்பூசி தேசிய மருந்து தர சோதனைக்கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor