யாழில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டதில் அணி திரளுங்கள்!

அனுராதபுரம் சிறைச்சாலை தமது விடுதலையை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஏற்ப இந்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

அந்தவகையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor