சாவகச்சேரியில் கத்திமுனையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூபா 18 லட்சம் கொள்ளை!!!

சாவகச்சேரி நகர் ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்குள் கத்தியுட்ட் புகுந்த கொள்ளையர் ஒருவர், பணியாளரை அச்சுறுத்தி சுமார் 18 லட்சத்து ரூபா பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 18 இலட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.

இதன்போது கத்தியோடு உள்நுழைந்த கொள்ளையர் ஒருவர், அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor