யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த அந்தனர்கள் கைது!!

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் அந்தணர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

கோப்பாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர் குறித்த இரு அந்தணர்களையும் மறித்து சோதனையிட்ட போது இருவரின் உடமையில் இருந்து சிறியளவிலான கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

இரு அந்தணர்களும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், தென்மராட்சி பகுதியில் இருந்து வட்டுக்கோட்டையில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையே கோப்பாய் சந்திக்கு அருகில் மறித்து சோதனையிட்டதாக கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் கோப்பாய் காவற்துறையினர் முற்படுத்தினர். இந்த வழக்கினை விசாரித்த நீதிவான், இருவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor