வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

நிலவும் வறட்சியான காலநிலையுடன் சில பிரதேசங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 5 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 2.4 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வறட்சி காரணமாக 17 மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், புத்தளம், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நீர் தாங்கிகள் மூலம் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor