ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழ், சிங்கள நண்பர்கள்!!!

வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.

இருவரது உடலும் அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளது.

அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன்( (Nalaka Roshan) (31 வயது) மற்றும் காலி நெழுவ பிரதேசத்தை சேர்ந்த இராஜேந்திர சிவகுமார் (Rajendra Shivakumara) (19 வயது) என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தின் ஒரே இடத்தில் தொழில் செய்த நண்பர்களாவர். குறித்த இருவரும் கடந்த 25 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் இரவு 11.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

தமிழ் இளைஞர் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இரண்டு நண்பர்களினதும், நேற்று முன்தினம் செவ்வாயன்று (28) நடந்த இறுதிச் சடங்கின் போது இரண்டு குடும்பங்களும் ஒன்றாக சேர்ந்து, (Angunakolapelessa) உள்ள (Acharigama) ஆச்சாரகம புதைகுழியில் இளைஞர்களை அடக்கம் செய்தனர்.

தென்னிலங்கையில் இனவாத ரீதியான மோதல்கள் சில இடம்பெறும் நிலையில், இவ்வாறான துன்பியல் நிகழ்விலும் நல்லிணக்கம் பேணப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor