மகாவலி அதிகார சபையின் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையும் முல்லை மக்கள்!!! அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை’-இன் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.

மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, முல்லைத்தீவு மாவட்ட தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள், கலை, கலாசார, பண்பாடுகள் சிதைக்கப்படுவதை உடன் நிறுத்த வேண்டும், தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கை மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இப்போராட்டத்தில் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், நடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள், இளைஞர், யுவதிகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor