யாழில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சியை யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இவர்களின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்னர் யாழில் சிங்கள மகா வித்தியாலம் திறக்கப்பட்டது. 1953 இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பின்னர் 12 ஆண்டுகளின் பின் அதாவது 1965 ஆம் ஆண்டு யாழில் சிங்கள மகா வித்தியாலயம் நிறுவப்பட்டது.

போர்ச் சூழல் காரணமாக 1985 இல் சிங்கள மகா வித்தியாலயம் மூடப்பட்டது. யாழில் இருந்த சிங்கள மகா வித்தியாலய கட்டடம் இலங்கை இராணுவத்தின் முகாமாக காணப்பட்டது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் 1990 களின் பின்னரும் இயங்கி வந்தது.

கிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்த சூழலினால் அது மூடப்பட்டபோதும் அதன் அதிபராக பணியாற்றிய பௌத்த மதகுரு இறுதி யுத்தம் வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor