முச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

முச்சக்கரவண்டி சாரதிகள் குறைந்தபட்ச வயதெல்லையை 35 ஆக மட்டுப்படுத்த தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனையை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லையை பரிந்துரைக்க தேவையில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முச்சக்கரவண்டிகளை கட்டுப்படுத்துவதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor