வடக்கு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிபணியக் கூடாது: முதலமைச்சர்

அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு வடக்கு அதிகாரிகள் அடிபணியக் கூடாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திற்கான 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ”அரசியல்வாதிகள் மற்றும் பிற சக்திகளின் ஊடான அழுத்தங்களின் மூலம் உங்களுக்கு பாரிய சவால்கள் ஏற்படுத்தப்படக் கூடும். சட்டத்திற்கு புறம்பாக செயற்பட வலியுறுத்தப்படக்கூடும். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது சட்ட ரீதியாக செயற்பட வேண்டும்.

மக்களுக்காக சேவை செய்கின்றோம் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. எமது வடமாகாண சபை மக்களுக்கு எதனை வழங்க எண்ணியிருக்கின்றதோ அதனை நடைமுறைப்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor