யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் கொழும்பில் தற்கொலை!!

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பிரியதர்சினி புஷ்பராஜா (வயது -46) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது கணவர் மருத்துவர். குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மன உலைச்சலுக்கு உள்ளான குடும்பப் பெண், தனது அறைக்குச் சென்று மின் விசிறியில் தனது சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor