குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதம்!!

யாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழக்கத்திற்கு மாறாக திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ததில் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாலை 6 மணியளவில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் மழைப் பொழிவும் கனமாக காணப்பட்டுள்ளது.

காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப் பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்ததுடன், நான்கு வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

அத்துடன் பொன்னாலை குடியிருப்பு பகுதியில் கடும் காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து மூன்று வீடுகள் சேதமாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor