தாயும் மகனும் கிணறிலிருந்து சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலரின் அலுவலகத்துக்கு அருகே இன்று காலை 10 மணியளவில் கிணறு ஒன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டனர்.

“பெண்ணையும் அவரது 5 வயதுடைய மகனையும் காணவில்லை என அயலவர்கள் தேடிய சமயத்தில் அவர்கள் கிணற்றில் சடலமாக காணப்பட்டனர்.

33 வயதுடைய தாயும் 5 வயதுடைய சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியும்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor