நெடுங்கேணி மக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

நெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கும் அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயத்திற்கும் செல்லக்கூடாதென தொல்லியல் திணைக்களம் வழங்கியிருந்த உத்தரவை குறித்த திணைக்களம் நிபந்தனைகளுடன் தளர்த்தியுள்ளது. இந்த அனுமதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கும் தாம் அனுமதிப்பதாகவும், ஆனால் ஆலய புனரமைப்பு நடவடிக்கைகள் செய்வதாயின் தமது அனுமதியைப் பெறவேண்டும் என குறித்த திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிகுந்த போராட்டத்தின் பின்னர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஆடி அமாவாசை விரதத்திற்கு மட்டும் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் மக்கள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது

ஒலுமடு கிராமத்தில் உள்ள வெடுக்குநாறி மலை மற்றும் அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் ஆகியன தமது கட்டுப்பாட்டுக்குள் வருவதாக கடந்த 10 ஆம் திகதி அறிவித்த தொல்லியல் திணைக்களம் அங்கு செல்ல கூடாதெனவும் மீறி சென்றால் தண்டிக்கப்படுவீர்கள் எனவும் மக்களுக்கு கூறியிருந்தது.

Recommended For You

About the Author: Editor