குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய் என்கிறார் வடக்கு முதல்வர்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கும், வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிகாரி றொசான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இல்லாத விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு அரசியல் பின்னணியே காரணம் என பொலிஸார் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஆவா மற்றும் தனுரொக்ஸ் ஆகிய இரு வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையிலான வன்முறைகளே யாழில் பாரிய வாள்வெட்டு சம்பவங்களாக அரங்கேறி வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor