வீதியில் மோதிக்கொண்ட பொலிஸார்: வைரலாகும் காணொளி!

இலங்கை நகர் பகுதி ஒன்றில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வார்த்தைகளினால் மோதிக்கொள்ளும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாகனங்கள் நிறுத்த தடைசெய்யப்பட்டுள்ள பகுதியில் வாகனத்தை நிறுத்தியதால், அங்கு கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் சாரதிக்கு எதிராக அபராதம் விதித்துள்ளனர்.

இதன்காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாகனத்தில் இருக்கும் பொலிஸ் சாரதி, தனக்கு அபராதம் விதித்தால், உங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும், நீங்களும் தவறான இடத்தில் நிறுத்தி உள்ளீர்கள் என வாதிடுகிறார்.

குறித்த சம்பவம் எந்த பகுதியில், எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு வீதியில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor