யாழ். தீவைப்பு சம்பவம்: குள்ள மனிதர்கள் மீது சந்தேகம்!

யாழ்ப்பாணம்- அராலி மேற்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் வேலிக்கு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனை குள்ள மனிதர்களே மேற்கொண்டிருப்பார்களென அப்பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டதுடன் அவரது தம்பியின் வீட்டு யன்னல்களும் தட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அராலிப் பகுதிகளில் அண்மைக்காலமாக குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் இரவு வேளைகளில் வீடுகள் மீது கற்களை எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor