தரம் ஒன்று மாணவர் அனுமதி: நேர்முகத் தேர்வு ஓகஸ்டில்

2019ஆண்டு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

“சுற்றறிக்கைக்கு அமைவாக நேர்முக பரீட்சைக்கான குழு நியமிப்பதற்கான ஆலோசனைகள் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பப் படிவங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செப்டெம்பர் 15ஆம் திகதியளவில் முதற்கட்ட நேர்முக பரீட்சை நிறைவடையும். நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தொடர்பான தற்காலிக பெயர் பட்டியல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி அளவில் பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படும்” என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor