அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழப்பு – ஒருவரின் நிலை கவலைக்கிடம்

யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தோக்குப் பயணித்த நகரங்களுக்கு இடையிலான (இன்ரசிற்றி) தொடருந்துடனேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் மோதுண்டனர்.

தொடருந்து பாதுகாப்புக் கடவையை கடக்க முயன்றபோது இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“தொடருந்து வருகையால் சிக்னல் லைற்றுக்கள் ஒளிர்ந்த வண்ணம் இருந்த போதும் தொடருந்துக் கடவையை மூவரும் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றுள்ளனர்.

அவர்கள் மூவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.

இதன்போதே விபத்து இடம்பெற்றது” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஒருவரின் காதுக்குள் கெட் செற் இருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

Recommended For You

About the Author: Editor