யாழில் வழமையைவிட 4பாகை செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிப்பு!

நாட்டின் பல்வேறு பாகங்களில் மதிய நேரத்தின்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இன்று காலை 08.30 மணியுடன் , 24 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் வெப்பநிலை வழமையைவிட 4 பாகை செல்ஸியஸ் அளவில் பதிவாகியுள்ளது.

இதேநேரம் நுவரெலியா, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வழமையை விடவும் 2 பாகை செல்ஸியஸினால் வெப்பநிலை அதிகரித்திருந்ததாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பொலனறுவை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36.7 பாகை செல்ஸியஸாக பதிவாகியுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் மதிய நேரத்தில் வெப்பநிலை 2 பாகை செல்ஸியஸினாலும், ரத்மலானை பகுதியில் இரவு நேரத்தில் 2 பாகை செல்ஸியஸினாலும் வெப்பநிலை உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு குறித்து விளக்கமளித்துள்ள காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேமலால்,

முகில் கூட்டங்கள் அதிகரிக்கும்போது, அதனை அண்மித்த வளிமண்டல பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கும்.

அந்த வெப்பநிலையே கீழ்நோக்கி வெளிப்படும்.

இதனால், குறித்த பகுதிகளின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நிலத்தின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், காற்றானது நிலத்தின் ஊடாக பயணிக்கும்போதும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor