பல்கலைக்கழக அனுமதிக்கான “Z” வெட்டுப்புள்ளி இந்தவாரம் வெளியாகும்!

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையினூடாக தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக நுழைவிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இந்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

2017 ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்களுக்கான வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 25 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor