கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து!! 20 பேர் படுகாயம்!!

வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது இதில் பயணித்த 20 பேர் வரை காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவ மனை கொண்டுசென்று சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணம் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வற்றாப்பளையினை சேர்ந்தவர்களுடன் 5 படையினரும் அடங்கு கின்றார்கள்.

விபத்து குறித்து மதவாச்சி பொலீஸார்கள் விபரங்களை திரட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor