பாரிய போராட்டத்துக்கு தயாராகும் கல்வி நிர்வாக சேவை!

கல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சேவை சங்கம் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளன.

அரசியல் இலாபத்திற்காக 1018 பேருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையை உடனடினாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் அரசாங்கம் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையிலிருந்து விலகி, எதிர்வரும் 26 ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை கொழும்பு கோட்டை புகையிரதத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்போவதாகவும் அச்சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: Editor