போலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை!

கிளிநொச்சி – அக்கராயன் பிரதேசத்தில் நடமாடுகின்ற போலி வைத்தியரொருவர் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த நபர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றாத நிலையில், அந்த வைத்தியசாலையில் தான் பணியாற்றுவதாகக் கூறி, கிராம மக்களிடம் பணம் அறவிடுதல் உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக, கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரிடமும், அக்கராயன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor