முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரம்!

பொலிஸ் அதிகாரங்கள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு சட்டபூர்வமாக முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாரிய அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ள போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலிஸார் பாராட்டத்தக்க சேவையை ஆற்றிவருகின்ற போதிலும், நாட்டின் மோசமான நிலைமையை கருத்திற் கொண்டு முப்படையினரின் உதவியை நாட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியும், சட்டம் ஒழுங்கு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor