மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகம் திறந்துவைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் குறித்த அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், ப.அரியரத்தினம் ஆகியோரின் மாகாண நிதியொதுக்கீட்டில் இவ்வலுவலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட.மாகாண மகளிர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன், வட.மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor