தமிழ் மக்களை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஏமாற்றி வருகிறார் – நாமல் ராஜபக்ஷ

தமிழ் மக்களை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஏமாற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து வடக்கு மக்களுக்கோ தெற்கு மக்களுக்கோ எதனையும் செய்யவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுத் தருமாறு கோரிய போது, தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வையே கோருவேன் என பதிலளித்துள்ளார்.

ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ, அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார்” என கூறினார்.

Recommended For You

About the Author: Editor