விஜயகலாவிற்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு தெரிவித்த கூட்டு எதிரணியினர்!

விடுதலைப்புலிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதமைக்கு ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒன்றிணைந்த எதிரணியினர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு நேற்று (புதன்கிழமை) காலி – சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.

இதன் போது ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தேங்காய் உடைத்துள்ளார்.

பின்னர் குறித்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் ஒன்றிணைந்த எதிரணியினர் அமைதிப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor