ஒல்லாந்தர் கோட்டையில் ஒருபோதும் இராணுவத்தை அனுமதியோம்:முதலமைச்சர்

யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் நிரந்தரமாக முகாமிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பாக முதலமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு கொடுப்பததென்ற விடயம் சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது. வடக்கு ஆளுநரே இந்த விடயத்தினை ஆரம்பித்து வைத்தார்.

அவ்வாறு இராணுவத்திற்கு ஒல்லாந்தர் கோட்டையைக் வழங்க வேண்டுமாயின் யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோர வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேறுவார்களாயின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது.

தொல்பொருள் சின்னமாக விளங்கும் ஒல்லாந்தர் கோட்டையில் படையினரை அனுமதித்தால், பல பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும்.

அதுமாத்திரமன்றி, சபை சுற்றுலா மையம் ஒன்றிணை அமைக்க வடக்கு மாகாண அனுமதி கோரிய போது, எதிர்ப்பு தெரிவித்த தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், படையினரின் வருகையை மாத்திரம் அனுமதித்தது ஏன் என்பது புரியவில்லை.

சுற்றுலா மையம் அமைக்கக் கோரிய போது அதனை அனுமதிக்காத தொல்பொருள் திணைக்களம் இராணுவத்தினருக்கு ஒல்லாந்த கோட்டையை கொடுப்பது மனவருத்தமளிக்கின்றது” என்றும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor