அதிகாரப் பகிர்வை உருவாக்க எம்மால் முடியாதுள்ளது: சம்பந்தன்

இதுவரை நம்பகரமான அதிகாரப்பகிர்வை உருவாக்க எங்களால் முடியாதுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டினைப் பிரிக்காது இணைந்து ஐக்கியமாக நாட்டினை வழிநடத்திச் செல்ல வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. இந்நிலையில் எமக்கான ஓர் உண்மையானதும் நம்பகமானதுமான அதிகாரப் பகிர்வை இதுவரை நாம் உருவாக்கவில்லை.

மேலும் மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் எமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. எனவே எமது நகர்வுகள் அரசியலமைப்பு உருவாக்கத்தினை நோக்கி முன்னெடுக்கப்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்படாமை எமக்கு கவலையளிக்கின்றது. எனவே மாகாணசபை தேர்தலை இனியும் தாமதிக்காது உரிய காலத்தில் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor