எரிபொருள்களின் விலைகளைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

எரிபொருள்களின் விலையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்தது.
இதன்படி பெற்றோல் (92 ஒக்ரைன்) 145 ரூபாவாகவும் பெற்றோல் (95 ஒகரைன்) 155 ரூபாவாகவும் டிசல் 118 ரூபாவாகவும் சுப்பர் டிசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டன.

எனினும் எரிபொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும் பழைய விலைகளிலேயே அவற்றை விற்பனை செய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவால் எரிபொருள்களின் விற்பனை விலை தொடர்பான உத்தியோகபூர் அறிவிப்பை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிக்கவில்லை.

Recommended For You

About the Author: Editor