தமிழ் மக்களுக்காக பதவியை தியாகம் செய்கிறேன்: விஜயகலா மகேஸ்வரன்

தமிழ் மக்களுக்காக தமது பதவியை தியாகம் செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கில் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவதை எதிர்பார்ப்பதாக விஜயகலா தெரிவித்த கருத்து, நாட்டில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ் மக்களின் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்த விஜயகலா, தமிழ் மக்களுக்காக தமது பதவியை தியாகம் செய்வதாக குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் விஜயகலா தெரிவித்த கருத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் நேற்று மாலை பிரதமரை சந்தித்த விஜயகலா, தமது விளக்கத்தை வழங்கியிருந்தார். இந்நிலையில், தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor