விஜயகலாவின் உரைக்கு கோஷமெழுப்பியவர்கள் மீது விசாரணை!

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், கடிதம் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

‘ஐனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் உரையாற்றும் போதும் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலை புலிகள் குறித்து உரையாற்றும்போதும் அரச ஊழியர்கள் பெரும் கூச்சலிட்டு ஆரவாரித்தனர்.

எனவே குறித்த உரையின்போது கரகோஷம் எழுப்பிய அரச உத்தியோகத்தர்களின் மீதே விசாரணை நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை “தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும்” என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor