விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தின் இருப்பு தொடர்கிறது: முதலமைச்சர்

உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்பட்ட மக்கள் காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவத்தின் இருப்பு அங்கு தொடர்வதால் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் வடக்கில் நேற்று (திங்கட்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் பணிப்புரைக்கமைய மாவட்ட அரசாங்க அதிபரினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயம் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”வட. மாகாணத்தில் காணிகளை திருப்பிக் கொடுப்பது ஆமை வேகத்தில் நகர்வதாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளில்கூட பல மக்கள் திரும்பப் போய்க் குடியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தமான உண்மையினை அறியவே தான் வடமாகாணத்திற்கு வந்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்தார்.

இது குறித்து அரசாங்க அதிபரிடம் கேட்கப்பட்டதற்கு விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள்குடியேறியுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், பல காரணங்களை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மக்கள் மீள்குடியேறவில்லை என எடுத்துரைத்தார். காணிகள் கிடைத்தும் வீட்டுத்திட்டம் கிடைக்காமை, காணிகளுக்கு அருகில் இராணுவம் குடிகொண்டிருத்தல், விடுவித்த சில காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறாமை போன்ற காரணிகளால் மீள்குடியேற்றம் முழுமை பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor