நீங்கள் மாதத்திற்கு ஒரு ஹர்த்தால் செய்தால் நாங்கள் என்னண்டு வியாபாரம் பார்ப்பது! – யாழ் வர்த்தகர்கள்

மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து நேற்று வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் யாழ் நகரம் உள்ளிட்ட பிரதேச வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துளைப்பு வழங்க மறுத்த நிலையில் நேற்றயதினம் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில்லை.

சில இடங்களில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு காலையில் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் “நீங்கள் மாதத்திற்கு ஒரு ஹர்த்தால் செய்தால் நாங்கள் என்னண்டு வியாபாரம் பார்ப்பது” என சில வர்த்தகர்களும் தனியார் நிறுவனத்தினரும் சினந்துகொண்டதாகவும் தெரியவருகின்றது.

எனினும் வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் பரவாலாக ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரியவந்துள்ளது. யாழ் நகரில் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றியிறக்கிவர வலிகாமம் மேற்கில் ஆட்டோ உரிமையாளர்கள் இணைந்த சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆட்டோ பேரணி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே வடக்கு மாகாணம் முழுவதுமாக நேற்றைய தினம் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் பாடசாலைகள், பேருந்துகள், கடைகள் என்பன ஒரு சில இடங்களில் இயங்காவிட்டாலும் ஏனைய இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு கர்த்தால் முழுமையாக நடைபெறாது சில இடங்களில் சிலர் மட்டுமே கடைகளப் பூட்டியும் பஸ்கள் ஓடாமலும், பாடசாலைகள் இயங்காமலும் இருக்கின்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதேவேளை நேற்றுமுன்தினம் அழைப்பு விடுக்கப்பட்ட இக் ஹர்த்தாலுக்கு பல தரப்பினர்களும் ஆதரவைத் தெரிவிக்காத நிலையிலையே நேற்றைய கர்த்தால் பூரணமாக நடைபெறவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor