ஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்

ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமது தந்தை விடயத்தில் சிறந்த தீர்வை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி கூறியபோதும், தந்தையை விடுவிக்காமை தமக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதென அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதனால் அவரது இரு பிள்ளைகளும் அநாதரவாகியுள்ள நிலையில், பிள்ளைகளின் நலன்கருதி ஆனந்த சுதாகரை விடுவிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர். அந்தவகையில், நவோதயா மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளும் தமது கவலையை வெளியிட்டனர்.

அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்த போதும், தம்மை ஜனாதிபதி சந்திக்கவில்லையென அப்பிள்ளைகள் இருவரும் குறிப்பிட்டனர்.

இதனால் தாம் வேதனையடைந்ததாக தெரிவித்த ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், தமது தந்தையை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Recommended For You

About the Author: Editor