தமிழர் பகுதியில் இராணுவக் குறைப்புக்கு இடமில்லை!! – இராணுவத் தலைமை அறிவிப்பு

தமிழர் செறிந்து வாழும் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லையென இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கிலுள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது என வெளியான தகவல்களை நிராகரிப்பதாக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அதிருப்தியடைந்துள்ள சில அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் பொய்யான தகவல்களே எனத் தெரிவித்துள்ள தலைமையகம், நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இராணுவக் குறைப்புக்கு இடமில்லை எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல்களை பொதுமக்களை பிழையாக வழிநடத்தும் நோக்குடன் இந்த அரசியல் சக்திகள் செயற்படுவதாகவும், தாங்கள் தெசபத்தியானவர்கள் என்பதை காண்பிப்பதற்காகவுமே வ்வாறான தகவல்களை வெளியிடுகின்றனர் எனவும் இராணுவதலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor