முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் கொடி, 20 கிலோ கிளைமோர், கிரினைட்டுகளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் கொடியுடன் மூவர் முச்சக்கர வண்டியொன்றில் பயணம் மேற்கொண்டவேளை அதனை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டபோது ஏனைய இருவரும் தப்பி சென்றனர்.

இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது தப்பிச்சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மற்றையவரையும் கைது செய்யும் பொருட்டு தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியை மேலும் சோதனையிட்டபோது 20 கிலோ கிலைமோர் குண்டு 1, கைக்குண்டு 1, விடுதலை புலிகளின் சீருடை 2, 98 T 56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் புலி கொடிகள் 30 க்கு மேற்பட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor