நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலமைச்சரை சந்திப்பு

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (வியாழக்கிழமை) கைதடியில் இருக்கும் முதலமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடக்கு மாகாணங்களில் காணப்படும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஒருவர், 89 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் உட்பட குழுவினர் விஜயம் மேற்கொண்டு முதலமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor