தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியும்!

போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியுமென போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டப் பணத்தை 14 நாட்களுக்குள் தபாலகங்களில் செலுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.

எனினும் தபால் ஊழியர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது.

இதற்கு மாற்று நடவடிக்கையாக தண்டப் பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தபால் ஊழியர்களின் 25 தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் தபால் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor