இராணுவத்தின் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்

இாணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனிதாபிதமான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்ட்டுள்ள கண்புரை நோயாளரகளுக்கான இலவச சத்திரசிகிச்சைத் திட்டம் முதியோர்களுக்கு உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதமாகும் என கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவையின் உப தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

பலாலி இராணுவ வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்களின் பங்களிப்புடன் கண்புரை நோயாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்டிபற்றது இதில் கலந்துகொள்ள 400 இற்கும் அதிகமான கண்புரை நோயாளர்கள் வடமாகாணத்தின் பல இடங்களில் இருந்து வந்திருந்தனர். இவர்களில் 169 நோயாளரகள் கண்புரை சத்திரசிகிச்சைக்கு அவசியம் உட்படுத்தப்பட வேண்டியவர்களாக வைத்திய நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இவர்கள் கட்டம் கட்டமாக எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு வைத்திய கண்காணிப்புக்குப் பின் மீண்டும் அழைத்து வரப்படவுள்ளனர் அனைத்து ஏற்பாடுகளையும் இராணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளை தலைமையகமே மேற்கொண்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை மூலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 55 நோயாளர்கள் கண்புரை சிகிச்சை பரிசோதனைக்காக விசேட பேருந்தில் அழைத்துவரப்பட்டனர். இவர்களில் அரைவாசி பேர் வைத்தியநிபுணர்களின் ஆலோாசனைக்கு அமைவாக சத்திரசிகிச்கை்கு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். ஆனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஒவ்வொரு நோயாளியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையை பெறுவதற்கு சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க நேர்கிறது.

கண்புரை நோயாளர்கள் இதனால் இடர்பாடுகளையே எதிர்கொள்ள நேர்கின்றது. இவ்வாறான நிலையில் இலவச சத்திரசிகிச்சையை திட்டத்தை யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆரம்பித்து உள்ளார் இதற்காக கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை இவருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.

வடமாகாணத்தை சேர்ந்த முதியோர்களுக்கு மாத்திரம் அன்றி இங்கு கண்புரை நோயாால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் இவ்வேலைத்திட்டம் உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதமாகும் .இவ்வேலைத்திட்டத்தின் உச்சபட்ச பலனை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். பலாலி இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தினர் மிகுந்த கண்ணியத்துடன் கரிசனையுடன் நடந்து கொண்டனர் என்பதையும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

Recommended For You

About the Author: Editor