கொக்குவிலில் வாள்வெட்டு நடத்திய கும்பலில் மூவர் சிக்கினர்!

கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு, கவனிப்பின் பின்னர் ஒப்படைக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டை, ஆறுகால்மடப் பகுதியைச் சேர்ந்த ஆவா குழு இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

4 மோட்டார் சைக்கிளிலில் வாள்களுடன் வந்த கும்பல், அந்தப் பகுதி இளைஞன் ஒருவரை தாக்கியது. இளைஞன் காயமடைந்தார்.

சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பித்த கும்பலை, அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி துரத்தித்தினர். கும்பல் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

பிடிபட்டவர் மக்களால் கவனிக்கப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் பிடிபட்டனர்.

ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

3 சந்தேகநபர்களும் மானிப்பாய் பொலிஸாரால் ஏறகனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor