விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் கண்டுபிடிப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் காணப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், புதையல் தோண்டிய விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் புதையல் வேட்டையினை ஆரம்பித்து அகழ்வுப்பணிகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவ்வாறு புதையல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor