கொக்குவில் இந்து ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்!!

கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியர் பிரதீபன், நேற்று மாலை தாக்கப்பட்டார்.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர், ஒழுக்கமின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தனர். அதன் பின்னணியிலேயே ஆசிரியர் தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து கல்லூரியின் நுழைவாயிலில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இன்று காலை 8 மணிமுதல் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களது பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: Editor