இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவலை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் சில்வா மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இரத்மலானை, ஞானானந்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாததுடன், சம்பவத்துக்கான காரணமும் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor